குபேர விளக்கு | Lakshmi Gubera Vilakku
குபேர விளக்கு | Lakshmi Gubera Vilakku
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும், நமது வீட்டிற்கு எப்போதும் செல்வத்தை ஈர்க்கும் சக்தி கிடைப்பதற்கும், நாம் முழு மனதுடன் செய்ய வேண்டிய ஒரு விசேஷ விளக்கு பூஜை உள்ளது.
குபேர விளக்கு
செல்வத்தின் அதிபதியாக குபேரர் விளங்குகிறார். அவரை நாம் வணங்கி வர அவரின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெறலாம். அவரின் அருள் பெற குபேரர் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடலாம். குபேர விளக்கை ஏற்ற சரியான தினமாக வியாழக்கிழமை பார்க்கப்படுகின்றது. அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் இந்த குபேர விளக்கை ஏற்றி பூஜை செய்வது உகந்தது.
விளக்கு ஏற்றும் நேரம்
குபேரருக்கு விருப்பமான வியாழக்கிழமை தினத்தில் காலையில் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அன்று மாலை வீட்டின் வாசலில் செம்மண் பட்டை இட்டு அலங்காரம் செய்ய வேண்டும். அதன் மீது பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். வாசல் நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதன் பின்னர் கரும்புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து, அதை இரண்டாக வெட்டவும். ஒருதுண்டில் மஞ்சள், மற்றொரு துண்டில் குங்குமம் தடவி, நிலைப்படிக்கு இருபுறமும் ஒவ்வொன்றை வைக்கவும். அதன் பின் நிலைப்படியின் இருபக்கமும் மலர்களை வைக்கவும்.
5 ரூபாய் நாணயம்
முதலில் குபேர விளக்கிற்கும் குபேர விளக்கு வைக்கும் மனை அல்லது தட்டிற்க்கு ஒற்றைப்படையில் மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். பிறகு குபேர விளக்கு வைக்கும் தட்டில் சிறிதளவு பச்சரிசியை வைக்கவேண்டும். பச்சரிசி மகாலக்ஷ்மியின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. குபேரருக்கு விசேஷமான எண் 5. எனவே ஐந்து ரூபாய் நாணயத்தை பச்சரிசியில் வைக்க வேண்டும்.
சுத்தம் செல்வம் தரும்
குபேரருக்கு விருப்பமான வியாழக்கிழமை தினத்தில் காலையில் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அன்று மாலை வீட்டின் வாசலில் செம்மண் பட்டை இட்டு அலங்காரம் செய்ய வேண்டும். அதன் மீது பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். வாசல் நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதன் பின்னர் கரும்புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து, அதை இரண்டாகாக வெட்டவும். ஒருதுண்டில் மஞ்சள், மற்றொரு துண்டில் குங்குமம் தடவி, நிலைப்படிக்கு இருபுறமும் ஒவ்வொன்றை வைக்கவும். அதன் பின் நிலைப்படியின் இருபக்கமும் மலர்களை வைக்கவும்.
குபேர விளக்கு ஏற்றும் முறை
விளக்கு ஏற்றும் போது வீட்டினுள், வாசலின் முன் நின்றபடி, நமது இடது புறத்தில், ஒரு மரப்பலகை அல்லது தட்டி நன்றாக சுத்தம் செய்த குபேர விளக்கை வைக்கவும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைக்கவும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை எடுத்து, ஒன்றாக சேர்த்து ஒரு திரியாக்கி குபேர விளக்கில் போடவும். பின்னர் வீட்டில் எப்போதும் வீட்டில் விளக்கேற்றும் பூஜை அறையில் விளக்கேற்றிய உடன், குபேர விளக்கிலும் தீபத்தை ஏற்ற வேண்டும்.
குபேரன் காயத்ரி மந்திரம்
குபேர தீபத்தை குபேரன் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டே ஏற்றலாம்.
ஓம் யக்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவ ணாய தீமஹி! தந்நோ குபேர ப்ரசோதயாத்
இப்படி செய்வதால் நமக்கு குபேரரின் அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். குபேர விளக்கை தினமும் பூஜை அறையில் ஏற்றி வரலாம். குபேரருக்கு உகந்த திசை வடக்கு. ஆகையால் பூஜை அறையில் வடக்கு திசை நோக்கி ஏற்றவேண்டும்
நெய் தீபம்
குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குபேர திரியினால் அதாவது குபேரருக்கு உகந்த நிறம் பச்சை. அதனால் பச்சை நிறத்தில் உள்ள திரியால் குபேர விளக்கு ஏற்றினால் மிகவும் சிறந்த பயனளிக்கும். பச்சை நிற தரி இல்லை எனில் பஞ்சு திரி வைத்தும் விளக்கு ஏற்றலாம். குபேர விளக்கில் ஐந்து கற்கண்டு சேர்க்கவேண்டும். கற்கண்டு சேர்ப்பதனால் பணவரவு அதிகரிக்கும். விளக்கைச் சுற்றி வாசனை மலர்கள் வைக்க வேண்டும். குபேர விளக்கை ஏற்றிய பின்னர் நம் வீட்டின் நிலை வாசலில் இடதுபுறம் வடக்கு நோக்கி வைக்க வேண்டும்.
பயன்கள்
தன பண வசியம்
செல்வம் பெருகும்
கடன் தீரும்
பணம் தங்கும்
குரு அருள் கிடைத்து தங்கம் சேரும்