Appuchi disti pie | அப்புச்சி திஷ்டி பை
Appuchi disti pie | அப்புச்சி திஷ்டி பை
அப்புச்சி திஷ்டி பை
திருஷ்டி தோஷங்கள் உடனே சரியாக்கும்
ஒருவர் நன்றாக வாழ்ந்தாலே அவரைப்பார்த்து வயிறு எரிவார்கள். அவர்களின் வயிற்றெரிச்சல் நல்லவர்களைக்கூட கஷ்டத்திற்கு உள்ளாக்கும். நோய் நொடிகள் வந்து பாடாய் படுத்தும். எனவே கண் திருஷ்டி நீங்க சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். அது எளிமையான பரிகாரம்தான்.
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்பைதான் அவ்வாறு பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கண் திருஷ்டி தாக்கினால் ஒருவருக்கு வறுமை, நோய் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி துன்பங்கள் வரும்
ஒருவருக்கு கண் திருஷ்டி இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?.. பரிகாரம் என்ன?
அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும்.
எந்த நேரத்தில் திருஷ்டி கழிக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. ஏதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம்.
சில சமயம் அதில் ஏதாவது கருப்புக்கறை படலாம். வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.
கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும்.
தூக்கம் அதிகமாகலாம் சப்பாடு பிடிக்காமல் போகலாம். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கை நழுவிப் போகும்.
கவனிக்க :
திருஷ்டிக் கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி சுற்றிக்கொள்பவரைவிட வயதில் மூத்தவராக இருந்தல் அவசியம். திருஷ்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும்.
தனியாகவோ அல்லது கூட்டமாகவோ எப்படி வேண்டுமானலும் திருஷ்டி கழிக்கலாம். ஆனால் கூட்டத்தில் நிற்பவர்களில் பாதிபேருக்கு ஒருவரும், மீதி பேருக்கு மற்றொருவர் என்று மாற்றி மாற்றி திருஷ்டி கழிக்க கூடாது. நிற்கிற அத்தனை பேருக்கும் ஒரே நபர் தான் திருஷ்டி கழிக்க வேண்டும்.
எளிமையான பரிகாரம்
நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம், மனக்கஷ்டம், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் இருப்பது கண் திருஷ்டிதான். இதன் மூலம் வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும். இதை ஒழிக்க எளிமையான பரிகாரம் ஒன்று உள்ளது. அதை ஞாயிறன்றுதான் செய்ய வேண்டும்.
அப்புச்சி திஷ்டி பை
18 விதமான மூலிகைகள்
சதுரகிரி , வெள்ளியங்கிரி , கொல்லிமலையில் இருந்து வர வைக்கப்பட்ட மூலிகைகளில் மகா சித்தர் அகத்திய பெருமானின் மந்திரவாள் ஓலைச்சுவடியில் கூறியது போல் திருஷ்டி தோஷ மூலிகைகளையும் திருஷ்டி தோஷ மந்திரங்களையும் பூஜை செய்து உங்களுக்காக அனுப்புகின்றோம் இந்த திஷ்டி தோஷ மூலிகை பையில் வெண்கடுகு கருங்கடுகு , நாய்கடுகு , நாயுருவி , சாம்பிராணி, அடுப்புக்கரி , மிளகு , வரமிளகாய் , பச்சைகற்பூரம் , மயிலிறகு பூண்டுசருகு கல் உப்பு, பாறை உப்பு , ஓமம் படிகாரம் , கிராம்பு பஞ்சகவ்ய கூட்டுப்பொருள்கள் , கழுதை லத்தி , வேப்பமரத்து இலை + சில ரகசிய மூலிகைகள் சேர்த்து உருவாக்கப்பட்டது அப்புச்சி திஷ்டி பை.
பயன்படுத்தும் முறை
மாலை 7 மணிக்கு மேல் கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும். இந்த அப்புச்சி திஷ்டி பையை உங்கள் இடது கைகளில் எடுத்து எட்டு முறை வலது புறமாகவும் எட்டு முறை இடது புறமாகவும் உங்கள் தலையில் சுற்றி வீட்டுக்கு வெளியே வைத்து ( ஓம் றிங் நசி நசி 27 முறை சொல்ல வேண்டும்) கற்பூரத்தை இரண்டு வைத்து கொளுத்தி விட வேண்டும் பிறகு வீட்டினுள் வந்து ஒரு கையளவு கல் உப்பு எடுத்து குளிக்கும் நீரில் போட்டு அந்த நீரில் குளித்து விட வேண்டும் பிறகு பூஜை அறையில் சாமிக்கு தீபம் ஏற்றி நெற்றியில் திருநீர் வைத்துக் கொள்ள வேண்டும்
வெளியில் இருந்து எந்த பிரச்சனையும் வீட்டுக்குள் நுழையாது. கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை வரை நம் வீட்டுக்குள் வர பயப்படும்.