அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே
நான் சொல்லக் கூடிய ஒரு பொருளை ஏழு நாட்களுக்கு ஒரு முறை உங்கள் பர்சில் வைத்தால். உங்களுடைய பர்ஸில் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். துருநாற்றம் இருந்தாலும் விலகும் உங்கள் பர்சுக்கு என்ன தேவையோ அதை கொண்டு வந்து தரும். அந்த விஷயம் என்னவென்றால் புதினா.
பொதினா என்று சொல்லக்கூடிய புதினா இது நம் வீட்டின் அருகில் உள்ள காய்கறி கடைகளிலும் கிடைக்கும். அந்தப் புதினா இலையில் ஒரே தண்டில் மூன்று இலை இருக்கும்படி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இலை Damage ஆனா இலையாக இருக்கக்கூடாது.
இந்தப் புதினா இலையை உங்கள் பணம் வரிசையில் கடைசி பணத்துக்கு முன்னாடி வையுங்கள். இந்த புதினா இலையை ஏழு நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருங்கள். பொதுவாக இந்த புதினா இலை க்கு எதிர்மறை சக்திகளை போக்கி நேர்மறையான சக்திகளை உருவாக்கும். இதை நீங்கள் ஏழு நாட்களுக்கு ஒரு முறை இதை மாற்றி கொண்டே இருந்தீர்கள் என்றால் உங்கள் பர்ஸ் புத்துணர்ச்சியோடு இருக்கும்.
அவ்வாறு உங்கள் பர்ஸ் புத்துணர்ச்சியுடன் இருந்தால் மகாலட்சுமி கடாட்சம் உருவாகும். அதன் மூலம் பணம் பெருகும்.
ஆகையால் இதை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் செயல்படுங்கள்.
உங்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் பெருகட்டும்.
வாழ்க பணமுடன்!!!