அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே
நம்மளுடைய மணி பர்சை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும். பணம் என்பதை நாம் வைக்க கூடிய இடத்தில் சுத்தமாக இருக்க வேண்டும். நல்ல நறுமணத்துடன் இருக்க வேண்டும். உங்களுடைய பர்சை நீங்கள் எப்படி வைத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களுக்கு பணம் வந்து சேரும்.
உங்கள் பர்சில் தேவையில்லாத பொருட்கள் தேவையில்லாத பேப்பர்கள் இன்று குப்பையாக வைத்திருக்கக்கூடாது. இந்த மாதிரி நீங்கள் வைத்திருந்தால் உங்கள் பர்ஸ்க்கு பணம் வரவே வராது.
சில பேர் கூறலாம் இது மூடநம்பிக்கை என்று இது மூட நம்பிக்கை அல்ல இது ஒரு விதமான ஒழுங்குமுறை. ஒரு எடுத்துக்காட்டாக உங்கள் கருத்தில் 10 ரூபாய் நோட்டு 50 ரூபாய் நோட்டு 100 ரூபாய் நோட்டு 500 ரூபாய் நோட்டு 2000 ரூபாய் நோட்டு இவை எல்லாம் கலந்து கலந்து இருந்து அதை என்ன சொன்னால் எவ்வளவு கடினமாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். இவை எல்லாம் ஒரு ஒழுங்கு முறையில் அதாவது வரிசை வாரியாக இருந்தால் நாம் எண்ணுவதற்கு சுலபமாக இருக்கும் இதுதான் நம் ஒழுங்குமுறை என்று சொல்லுவோம். ஆகையால் உங்கள் பர்ஸில் பணம் இருந்தால் அதை வரிசை வாரியாக ஒழுங்குமுறையில் வையுங்கள்.
அதற்கப்பறம் உங்கள் பர்சில் கசங்கிய நோட்டை ஒருபோதும் வைக்காதீர்கள். அதன்பின் ஏழு நாட்களுக்கு ஒருமுறை உங்கள் பரிசில் புதினா இலையை வையுங்கள் 7 நாட்களுக்குப் பிறகு அதை தூக்கி எறிந்துவிட்டு புதிய புதினா இலையை வையுங்கள். இது உங்கள் பர்சிற்கு நல்ல ஆற்றலையும் நறுமணத்தையும் தரும். அதற்குப் பிறகு ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது உங்கள் பர்சில் இருக்கும் பணத்தை எண்ணிப் பாருங்கள்.
மேலும் உங்கள் பரிசில் 30 நாட்கள் பயன்படுத்தும் பொருட்களை மட்டும் வையுங்கள். முக்கியமாக இறந்தவர்கள் படத்தை வைக்காதீர்கள்.
உங்கள் பரிசில் இருக்கும் அதிகபட்ச மதிப்பெண் அதாவது இரண்டாயிரம் ரூபாய் எப்போதும் செலவு செய்யாதீர்கள். தொடர்ந்து உங்கள் படத்தில் வைத்து கொண்டே வாருங்கள்.
பணவளக்கலை என்ற பயிற்சியில் கூட நாங்கள் இதுதான் பின்பற்றிக் கொண்டு வருகின்றோம். பரிசில் எவ்வாறு பணம் வைக்க வேண்டும் என்ற சூட்சம மந்திரத்தை இந்த பதிவில் நான் கூறியுள்ளேன். அதைப் பின்பற்றி செல்வந்தர் ஆகுங்கள்.
சரியான முயற்சி மற்றும் பயிற்சி மற்றும் தொடர்ச்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் செல்வந்தர் ஆகலாம்.
உங்கள் வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்து இருக்கட்டும் நிலைத்திருக்கட்டும்
வாழ்க பணமுடன்..! நன்றிகள் கோடி..!