ஆனந்த வணக்கம் எனதருமை அன்பர்களே நண்பர்களே
பொதுவாக நாம் அம்மாக்களை நீ எப்பொழுதும் சும்மாதான் இருக்கின்றாய் அதை செய்தால் என்ன இதை செய்தால் என்ன என்று நாம் சொல்லி இருந்திருப்போம் முதலில் கணவன்மார்கள் மனைவிகள் சொல்லி இருப்பார்கள் அதற்கு பிறகு பிள்ளைகள் அதைத் தொடர்ந்து இதே வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள் நீ சும்மாவே தான் இருக்கின்ற இதை செய்தால் என்ன என்று.
ஒரு தாய்மார் யோசித்தார் என்ன எல்லாரும் நம்மை சும்மா இருக்கின்றாய் சும்மா இருக்கின்றாய் என்று கூறுகின்றார்கள் ஒருநாள் நாம் சும்மா இருந்து பார்ப்போம் என்று காலையில் குழந்தைகள் கணவன் வெளியே சென்ற பிறகு எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருந்தார் மாலை அவர்கள் திரும்பி வந்த பிறகு என்ன எல்லாம் போட்டது போட்டபடி இருக்கின்றது வீடு அசுத்தமாக இருக்கின்றது காலையில் நாம் எப்படி சென்றோம் அப்படியே இருக்கின்றது என்று யோசித்தார்கள் பிறகு கணவன் வந்தான் அவரும் அதே சிந்தித்தார் எல்லாம் போட்டபடி அப்படியே இருக்கின்றது என ஆயிற்று என்று எல்லாம் தேட ஆரம்பித்தார்கள் அந்த அம்மா ஒரு அறையில் நாவல் படித்துக் கொண்டு சூடாக காபி குடித்துக் கொண்டிருந்தார். அனைவருக்கும் ஆச்சரியம் ஆகிவிட்டது என்ன ஆயிற்று உடம்பு எதாவது சரியில்லையா என்ன என்று ஆச்சிரியத்தில் மூழ்கினார்கள். அப்போது வந்த பெண்கூறுகிறார் எப்போதும் என்னை சும்மா இருக்கின்றாய் சும்மா இருக்கின்றாய் என்று கூறுகிறீர்களே ஒரு நாள் சும்மா இருந்து பார்த்தேன் என்று கூறினார். அப்போதுதான் அந்த ஆணுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் புரிந்தது. அந்தப் பெண் சும்மா இருந்திருந்தால் தினமும் வீடு சுத்தமாக இருக்காது. இரவு சாப்பிடுவதற்கு உணவு இருக்காதுஎன்று புரிந்துகொண்டார்கள். அதற்குப் பிறகு அந்த கணவன் மன்னிப்பு கேட்டுவிட்டுஇனிமேல் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம் என்று பிள்ளைகளும் கூறினார்கள்.
இதை எதற்காக உங்களுக்கு சொல்கின்றேன் என்றால் நிறைய ஆண் மார்கள் தாயையோ அல்லது மனைவியையோ நீ சும்மா தானே இருக்கின்றாய் என்று சொல்லிவிடுகிறார்கள் ஆனால் அவர்கள் சும்மா இருந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு நன்றாகப் புரிந்து இருக்கும். நாம் தொழில் விஷயமாக வியாபார விஷயமாக வெளியூர் சென்று விடுகிறோம் வீட்டை கவனிப்பது இல்லை ஆனால் வீட்டை முழுவதுமாக பார்த்துக்கொள்வது தாய்மார்கள் தான் ஆகையால் அவர்களைப் பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை அவர்களை நீ சும்மா தான் இருக்கின்றாய் என்று ஏளனம் செய்யாதீர்கள் புண்படுத்தாதீர்கள்.
ஏனென்றால் பெண்கள் சக்திக்கு சமம். பெண்ணில்லா வீட்டில் மகாலட்சுமி வசியம் செய்யாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பெண்களைப் போற்றுங்கள் அவர்களை மதித்தால் நாம் எதிர்பார்த்த செல்வம் நம் வீடு தேடி வரும்.
சமீபத்தில் இன்னொரு ஒரு உலக அழகி வந்தார்கள் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்கள் அதற்கு பிறகு தான் அவர் உலக அழகி என்ற பட்டத்தை வாங்கினால் அது என்ன கேள்வி என்று தெரியுமா?
உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்குபவர் யார் அல்லது அதிக சம்பளம் யாருக்குத் தரலாம். அதற்கு அவர் கூறுகிறார் உலகிலேயே அதிக சம்பளம் வாங்குவார் என் தாயார்தான். அதுதான் உண்மை
ஏனென்றால் நாம் பல்வேறு விதமான தொழிலோ பல்வேறு விதமான வேளையில் நாம் இருப்போம் ஆனால் வீட்டுக்கு வந்தவுடன் ஒரு திருப்தி இருப்பதற்காக காரணம் அந்த தாய்மார்கள் தான் அதை சிறப்பாக இன்றுவரை செய்து வருகின்றார்கள். முகம் சுழிக்காமல் பரிமாறுவதும் நம்மை அரவணைப்பது என்று பல்வேறு விதமான கடமைகளை செய்து வருகின்றார்கள். அந்த தாய்மார்களுக்கு இவ்வளவுதான் சம்பளம் என்று அந்த கடவுளால் கூட நிர்ணயிக்க முடியாது.
இதுவரை என் தாய்மாருக்கு நான் எந்த ஒரு உதவியும் செய்ததில்லை மற்றும் என்னுடைய சரிபாதி என்னுடைய மனைவிஎன்னுடைய பாதி வேலையை அவர்கள் தான் செய்து முடிப்பார்கள்.என்னுடைய பக்கபலமாக இருக்கும் என்னுடைய முழு பாதி மனைவி தான். இதேபோன்று பல ஆண்களுக்கு பெண்கள் தான் பக்கபலமாக இருந்து வருகிறார்கள். ஆகையால் பெண்ணை போற்றுங்கள்.
பெண்ணை மதித்தாலே மகாலட்சுமி வீடு தேடி வந்து அமரும். இதை செய்து பாருங்கள் உங்கள் வாழ்வு மாறும் மாற வேண்டும் என்று நானும் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.
நன்றிகள் கோடி
ஜெய் ஆனந்தம்