குபேர கிரிவலம் - ஓராண்டு வரை பொருளாதாரத் தன்னிறைவைத் தரும்

குபேர கிரிவலம் - ஓராண்டு வரை பொருளாதாரத் தன்னிறைவைத் தரும்

ஜெய் குபேர ஜெய் ஆனந்தம்

ஓராண்டு வரை பொருளாதாரத் தன்னிறைவைத் தரும் குபேர கிரிவலம் 11/12/2023

கடந்த ஐந்து முற்பிறப்புகளில் நாம் செய்த தீவினைகளின் தொகுப்பாக நமது இப்பிறவி நோய்கள்,கடன்,எதிரி,துரோகம்,வேதனை,கண்ணீர்,அவமானங்களாக அனுபவித்துவருகின்றோம்;
கடந்த ஐந்து முற்பிறப்புகளில் நாம் செய்த நல்வினைகளின் தொகுப்பாக நமது இப்பிறவி வருமானம்,சொந்த வீடு,சொத்துக்கள்,புகழ்,இன்பங்கள்,செல்வாக்கு,வாகன வசதி,அழகான ஆடைகள்,ஆடம்பரமான வாழ்க்கை போன்றவைகள் அமைகின்றன;

முழு பாவி என்று எவரும் இந்த கலியுகத்தில் பிறப்பதில்லை;
முழு புண்ணிய ஆத்மா என்றும் எவரும் இங்கே பிறப்பதில்லை;

மானுடப்பிறப்பின் நோக்கமே மறுபிறவி இல்லாத முக்திதான்;இதை உணராமல் பல கோடி மனித ஆத்மாக்கள் பணத்தின் பின்பாகவும்,புகழைத் தேடியும்,அதிகாரத்தை நோக்கியும் ஓடி அரிய மானுட வாழ்க்கையை வீணடித்துவிடுகின்றார்கள்;

பரிகாரங்களில் 90% நாமே அதற்குரிய காரணம்(என்ன தோஷம்,எப்படி அதை நிவர்த்தி செய்ய வேண்டும்) அறிந்து செய்யவேண்டும்;இல்லாவிட்டால் பலன் கிடைக்காது;பரிகாரம் செய்யத் துவங்கியது முதல் மூன்று ஆண்டுகளுக்காவது அசைவம்,மது,போதைப் பொருட்களை தவிர்த்துவிட்டு காத்திருக்க வேண்டும்;இல்லாவிட்டால் பலன் இல்லை;பரிகாரங்களை மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்;கடமைக்காகச் செய்யக் கூடாது;

சிலபல ஆன்மீக ரகசியங்களை எப்போதாவது பொது நல நோக்கில் யாராவது புண்ணிய ஆத்மாக்கள் வெளியிடுவது வழக்கம்;அதில் ஒன்றுதான் குபேர கிரிவலம்!

கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குபேரன் தமது குபேரப் பட்டணத்தில் இருந்து பூமிக்கு வருகின்றார்;வந்து,திரு அண்ணாமலையில் இருக்கும் குபேர லிங்கத்திற்கு சூட்சுமமாக வழிபடுகின்றார்;அதன் பிறகு,அவர் அங்கிருந்து கிரிவலம் புறப்படுகின்றார்;இதுதான் அந்த தெய்வீக ரகசியம்;

நாமும் அதே நேரத்தில் குபேரலிங்கத்தில் ஒரு மணி நேரம் இருந்து நமது பொருளாதாரத் தேவைகளை பிராத்தனையாக வைப்போம்;அதன் பிறகு,அங்கிருந்து நாமும் கிரிவலம் குபேரலிங்கத்தில் ஆரம்பித்து,குபேரலிங்கத்திலேயே நிறைவு செய்வோம்;இப்படிச் செய்துவிட்டு,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லக் கூடாது;எவர் வீட்டிற்கும் செல்லக் கூடாது;நேராக நமதுவீட்டிற்குச் செல்ல வேண்டும்;அப்படி சென்றுவிட்டால்,அடுத்த ஓராண்டுக்கு நமது பொருளாதார வளர்ச்சி அபரிதமாக இருக்கும்;கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் குபேரகிரிவலம் வருகை தந்து வளமான வாழ்க்கையை அருணாச்சலேஸ்வரர் அருளாலும்,குபேரலிங்கத்தின் ஆசியாலும் பெற்றுள்ளார்கள்;(ஒரு வருடம் வரை அசைவம்,மது இரண்டையும் தவிர்த்ததால் வளமான வாழ்க்கையைப் பெற்றார்கள் என்பதை இங்கே நினைவிற்கொள்ளவும்)

இந்த வருடம் குபேரகிரிவலம் 11.12.2023 திங்கள் கிழமை அன்று அமைந்திருக்கின்றது;இந்த நாளில் நாம் குபேரலிங்கத்திடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்வோம்;அதன் பிறகு,அங்கிருந்து கிரிவலம் புறப்படுவோம்;குபேரலிங்கத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வோம்;பிறகு,நமது வீடுகளுக்குச் செல்வோம்;

தொலைதூர மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வசிப்பவர்களும் இந்த அரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இவ்வளவு முன்பாக இந்தப் பதிவினை வெளியிடுகின்றோம்;

ஓம் அருணாச்சலாய நமஹ

இந்த நிகழ்வு நமது ஸ்ரீ குபேர பீடம் சார்பாக ஏற்பாடு செய்யபடவுள்ளது.

For more details - 786 886 8899

Yours happily
Dr.Star Anand ram
பணவளக்கலை Team
Sri Gubara peedam
Coimbatoer

Back to blog