ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே
உங்கள் இல்லத்தில் எவ்வாறு மூலிகை ஆவி பிடிக்க வேண்டும் என்ற எளிய வழிமுறையை இதைப் பற்றி தான் இந்த பதிவில் நான் கூற இருக்கின்றேன்.
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் அதில் முக்கால்வாசி தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதற்குப் பின் வெற்றிலை, கல்லுப்பு, துளசி, சிறிதளவு மிளகு, சிறிதளவு ஒமம், கொஞ்சம் வேப்பிலை இவருடன் சேர்த்து மஞ்சளையும் அந்த நீரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விட்டால் அந்த வேப்பிலை துளசியின் வாசம் நன்றாக தெரிய ஆரம்பிக்கும் அப்போது இறக்கி வைத்துவிட்டு நீங்கள் போர்வையை போற்றி ஆவி பிடிக்கலாம் அல்லது அடுப்பில் கொதி நிலையில் இருக்கும்போதும் ஆவி பிடிக்கலாம் உங்களுக்கு எது வசதியோ அதன்படி நீங்கள் ஆவி பிடிக்கலாம்.
இந்தக் கொரானா காலத்தில் நம் உடல் நிலையை எவ்வாறு சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது என்று பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கும். நம்மிடம் உள்ள பொருட்களை வைத்தே நம்மை நம்மால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
அதன்படி மூலிகைகளில் மூலமாக எவ்வாறு ஆவி பிடிப்பது என்றுதான் நாம் பார்த்துக் கொண்டு வந்தோம் அதன்படி அதில் சேர்த்த மூலிகைகளின் நன்மைகள் என்னவென்றால் வேப்பிலை நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள இலை நாம் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்தாலே நமக்கு நோய் எதுவும் வராது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதன் பிரகாரம் வேப்பிலையை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதற்குப் பிறகு அகத்தியப் பெருமான் கூறிய ஒன்று பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் நாம் உண்ணலாம்.மிளகுக்கு அவ்வளவு சக்தி உள்ளது அதனால் பத்து மிளகை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதற்குப் பிறகு கொஞ்சமாக கல் உப்பை சேர்க்கவேண்டும் கல்லுப்பு அதன் ஆற்றலை அதிகப்படுத்தும். அதற்கு அப்பறம் துளசி. துளசி என்பது கபம் நீக்கி என்று அனைவருக்கும் தெரியும்.அது தொடர்ந்து வெற்றிலையை சேர்க்கவேண்டும் வெற்றிலையும் ஒரு வகையான கபம் நீக்கி தான்.
இவை அனைத்தையும் ஒரு அகல பாத்திரத்தில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கிய பிறகு எவ்வாறு அதை ஆவி பிடிக்க வேண்டும் என்று சொல்கின்றேன்.
முதலில் அந்தப் பாத்திரத்தின் அருகில் நம் முகத்தைக் கொண்டு சென்ற பிறகு நன்றாக மூச்சை உள் நோக்கிய நோக்கிய இழுத்து விட வேண்டும். இதைத்தொடர்ந்து இருபத்தி ஒரு முறை நீங்கள் செய்த பிறகுஉங்கள் வாயை திறந்து அதேபோல் நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும்.இதையும் நீங்கள் ஒரு 21 முறை வரை செய்து வாருங்கள்.
இது உங்களுக்கு முழுதான ஆற்றலை தரவில்லை என்று நீங்கள் விரும்பினால் உங்கள் வீட்டில் உள்ள ஏதேனும் போர்வையை இருந்தால் அதை எடுத்துக்கொண்டு முழுதாக உங்கள் உடல் மூடியபடி ஆவி பிடியுங்கள். இவ்வாறு செய்யும்போது உங்கள் அந்த மூலிகை மீராவின் முழு ஆற்றலும் கிடைக்கும்.
இவ்வாறு செய்யும்போது நமக்கு நன்றாக வேர்க்கும். அவ்வாறு வேர்வையை வெளிவருவதால் நம் உடலில் இருக்கும் அழுக்கு நோய்கள் கிருமிகள் அனைத்தும் அந்த வேர்வையின் வழி வெளிவந்துவிடும். நம் உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளது அதில் ஐந்து வாரங்கள் நம் தலையில் உள்ளது கண் மூக்கு காது வாய் பெரும்பாலும் கிருமிகள் இதன் வாயிலாகத் தான் நம் உள்ளே சென்றடைகின்றது.
இவ்வாறு நீங்கள் அந்த துணியை வைத்து மூடி ஆவி பிடித்தால் உங்க சுவாசக்குழாயில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் ஒற்றை தலைவலி கண் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
ஒரு முக்கிய குறிப்பு நீங்கள் போர்வை அல்லது துணியை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை நீங்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய பிறகு அதை நன்றாக துவைத்து விட வேண்டும். நீங்கள் பயன்படுத்திய போர்வையோ அல்லது துணியையோ மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது ஏனென்றால் உங்கள் உடலிலிருந்து வரக்கூடிய கெட்ட கிருமிகள் அனைத்துமே அந்த போர்வை மற்றும் துணியின் வாயிலாகத்தான் வெளி வந்து தங்கியிருக்கும் ஆதலால் அதை நன்றாக துவைத்து பிறகு பயன்படுத்தலாம்.
இதை செய்த பிறகு நீங்கள் நன்றாக கை கால்களை நீட்டி படுத்து விடுங்கள். அதற்குப் பிறகு திரும்பி படுங்கள் அதற்கு பிறகு எழுந்து கை கால் முகங்களை நன்றாக கழுவி விடுங்கள். இதை ஒரு நாளுக்கு நீங்கள் இரண்டு தடவை செய்தீர்கள் என்றால் மிக நல்லது. அதாவது 6:00 to 7 மணி குள் வெறும் வயிற்றில் செய்யுங்கள். அதேபோல் மாலை 6 to 7 மணி குள் இதை செய்யுங்கள்.
இது கருணாவிற்கு மட்டும்தான் செய்ய வேண்டுமா அப்படி என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது என சரி உங்கள் வீட்டில் உள்ள அனைவருமே இதை இரண்டு முறை செய்து வந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக நம் உடலில் இருக்கும். நோய் வந்தால் தான் இதை செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை நோய் இல்லாவிட்டாலும் கூட நீங்கள் இதை செய்யலாம். பிற்காலத்தில் உங்களுக்கு இது பயன்படும்.
வீட்டுக்கு வெளியே சென்று வருபவர்கள் இதை தினசரி நீங்கள் செய்து வந்தீர்கள் என்றால் உங்களை சார்ந்தவர்களும் உங்களுக்கும் இந்த ஒரு உடல்சார்ந்த பிரச்சனையும் இருக்காது. இதை நான் ஆதியிலே நம் முன்னோர்கள் சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
அந்த காலத்தில் காய்ச்சல் வரும்போதெல்லாம் இதைத்தான் செய்தார்கள் பல காரணங்களால் நாம் அதை கைவிட்டு விட்டேன் இனிமேல் தொடர்ந்து மூலிகை சார்ந்த இத்தகைய மருத்துவத்தை வீட்டில் செய்து வருவோம் ஆரோக்கியத்துடனும் சகல பெரிதும் இருப்போம்.
உலகில் உள்ள அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.
நன்றிகள் கோடி
ஜெய் ஆனந்தம்