புத்த பூர்ணிமா உருவாக்கிய இடமாக சொல்லப்படும் இடத்தில் நான் சாரநாத்
இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார் தனது 4 சீடர்களுக்கு வழிநடத்த துவங்கினர் அந்த நாளே புத்த பூர்ணிமாவாக வணங்க படுகிறது
புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும ், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.
அசோகரின் தூண்கள் பேரரசர் அசோகரால் சுமார் 250 கி.மு.வில் வாரணாசிக்குஅருகில் உள்ள சாரநாத்தில் சிங்க முகம் கொண்டதாகும். இங்கே நான்கு சிங்கங்கள் திரும்பி அமர்ந்து இருக்கும். தற்போது தூண் சிங்கத் தலை உள்ள தூண், சாரநாத் அருங்காட்சியகம் இருக்கும் அதே இடத்தில் இருக்கிறது. அசோகரின் சாரநாத் சிங்க முகத் தூண், இந்திய தேசிய முத்திரையாகவும் மற்றும் அதன் அடிப்பகுதியில் "அசோகா சக்ரா" இந்திய தேசிய கொடிமையச் சக்கரமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சாரநாத்: முதன் முதலில் புத்தர் தனது உபதேசத்தைத் துவக்கிய இடம், தாமேக் தூபி மற்றும் சௌகந்தி தூபி(உத்தரப் பிரதேசம், இந்தியா)
சாரநாத் உத்தரப் பிரதேசம்
சாரநாத் (Sarnath) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு 10 கிமீ வட-கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நகரம் ஆகும். இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார்.
இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள சிங்பூர் என்ற இடத்திலேயே சைன மதத்தின் 11வது தீர்த்தங்கரர் என அழைக்கப்படும் சிரேயனசனாதரர் பிறந்த இடமாகும். இங்குள்ள அவரது கோவில் ஓர் ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
சாரநாத் (மான்களின் கடவுள்) என்ற இந்நகரம் சாமாத, மிரிகதாவ (மான் பூங்கா), மிகதாய, ரிசிபட்டணம், இசிபத்தான (ரிசிகள் தரையிறங்கிய இடம்) எனப் பல பெயர்களில் வழங்கி வருகின்றது. புத்தரால் குறிப்பிடப்பட்டுள்ள இசிப்பத்தான என்ற பெயர் பௌத்தர்கள் தரிசிக்க வேண்டிய நான்கு பௌத்த தலங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
குப்தர்கள் காலத்தில் சாரநாத் குன்றில் எண்கோண வடிவ சௌகந்தி தூபி நிறுவப்பட்டது.