ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே தொடர்ந்து பல்வேறு விதமான விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் ஆனந்தம் கொள்கிறேன்.
நான் இப்போது உங்களிடம் ஏன் இத்தகைய விஷயங்களை பகிர்கிறேன் என்றால் அனைவரும் சகல ஐஸ்வரியங்களும் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இத்தகைய பதிவை நான் மேற்கொள்கிறேன்.
நான் சொல்கின்ற அனைத்து விஷயங்களையும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் செய்யுங்கள் நம்பிக்கை இல்லாதவர்கள் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் நீங்கள் முதலில் உங்களை நம்ப வேண்டும் அதன்பின் நான் சொல்வதை நம்ப வேண்டும்.
இந்த இரண்டின் மீதும் நம்பிக்கை வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதனால்தான் இப்போதும் சொல்கிறேன் நம்பிக்கை மீது நம்பிக்கை வை என்று. நீ எச்செயல் செய்கிறாயோ அச்செயல் மீது நம்பிக்கை வை அப்போதுதான் அச்செயல் உன் மீது நம்பிக்கை வைக்கும்.
ஒரு செயலை செய்வதற்கு முன் உங்கள் மனதில் எழும் குழப்பங்கள் நாம் செய்வது சரியா என்று எழுந்துவிட்டாள். அச்செயலை செய்வதற்கு ஒரு பெரிய தடைகளை நீங்களே உருவாக்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.]
நம் முட்டாள் என்ற ஒரு சொல்லை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா முட்டு + ஆள். அதாவது கோயிலில் தேரை சரியான திசையில் வழிநடத்தி செல்வது அதன் வேகத்தை குறைப்பதற்காக ஒரு முட்டுக்கட்டையை பயன்படுத்துவார்கள்.
அதுதான் முட்டு என்று கூறுகிறோம். அதை போடுகிறவர் பெயர் முட்டுஆள் அது காலப்போக்கில் முட்டாள் என மாறியது. அதே போல் தான் நாமும் நம் வாழ்க்கையில் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்னதாகவும் அச்செயலுக்கு ஒரு முட்டுக்கட்டை வைத்து விடுகிறோம்.
அதேபோல் நாம் ஒரு செயலை செய்வதற்கு முன் நம்முடன் உள்ளவர்களிடம் கலந்து உரையாடி விட்டு செய்வதுண்டு. அப்படி செய்யும்போது அவர்கள் கூறுவார்கள் இது சரி வராது, இதை செய்வது அவசியமற்றது போன்ற பலவகையான தவறான எண்ணங்களே உங்கள் மனதில் பதித்து விடுவார்கள்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் நம்மால் வெற்றி என்ற ஒரு சொல்லை காதால் கூட கேட்க இயலாது. இந்த உலகில் கடவுள், பூதம், சாத்தான், சக்தி என்று எதுவும் இல்லை அவை எல்லாமே நாம் தான். அதைத்தான் ஆன்மிகத்தில் அழகாகச் சொல்வார்கள் அகம்பிரம்மாஸ்மி. நான் தான் கடவுள் என்பது போல நான் தான் வெற்றி நான்தான் சுகம் நான் தான் முயற்சி எல்லாமே நான்தான் என்று சொல்கின்ற நிலை வரும் வேளையில் வெற்றி நமதே.
நமக்குள் உத்வேகம் உள்ளது நமக்குள் சக்தி உள்ளது அதை பயன்படுத்தினாலே போதுமானது நாம் வெற்றி எட்டுவதற்கு. நம்பிக்கை என்பது ஊற்று போல ஊற்று எப்படி நீரை எடுக்க எடுக்க ஊறிக்கொண்டே இருக்கிறது அது போல நம்முள் உள்ள நம்பிக்கையை எடுக்க எடுக்க நம்பிக்கைதான் ஊரும் அதேபோல் அவநம்பிக்கையை எடுக்க எடுக்க அவ நம்பிக்கைதான் ஊரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\
ஆகையால் அன்பு நண்பர்களே நீங்கள் எச்செயல் செய்தாலும் அச்செயல் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் குடும்பத்தின் மீது பணத்தின் மீது உங்கள் நம்பிக்கையின் மீது உங்கள் செயலின் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். நீங்கள் முதலில் நம்ப வேண்டியது நான் செய்கின்ற செயல் என்னால் முடியும் என்று.