ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே
நிறைய பேருக்கு அடிக்கடி கழுத்து வலி வருதுன்னு சொல்லுவாங்க. செல்போனில் அதிகமாக வேலை செய்வதனால் டிரைவிங் செய்வதனால் அல்லது குனிந்து ஏதாவது வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி கழுத்து வலி வரும்.
இந்த கழுத்து வலி வருவதற்கு காரணம் அங்க இருக்கக் கூடிய நரம்புகள் வந்து ரொம்ப பலவீனமாக இருந்தால் அந்த வலி வரும். அந்த வலி தொடர்ந்து இருந்துச்சுன்னா வாழ்நாள் முழுவதுமே இருக்கும். இந்த மாதிரி கழுத்து வலி வருவதற்கு நம்ம ஊர் பாஷையில் பொடனி வலி என்று சொல்வோம் அல்லது குளிக்கும் போது ஏதாவது சுளுக்கு விழுந்து விடும் அல்லது ஏதாவது பாரமான பொருட்களைத் தூக்கும்போது நமக்கு எதிர்பாராமல் கழுத்து சுளுக்கு விழுந்துவிடும்.
இந்த மாதிரியான சுளுக்குகளை எடுப்பதற்கு அந்த காலத்தில் நம் வீட்டினருகே கைதேர்ந்தவர்கள் இருந்திருப்பார்கள். அவர்கள் கழுத்தை லேசாக திருப்பினாள் அந்த சுளுக்கு தானாகவே சரியாகிவிடும். ஆனா இப்போ இருக்க சூழ்நிலைகள் நம்முடைய தலையே திருப்புவதற்கு நமக்கு பயமாயிருக்கு. இதுல நம்ம வீட்ல இருக்கா மத்தவங்களுக்கு இந்த கழுத்து வலியை சரி செய்ய அவங்க தலையை திருப்புவதற்கு இன்னும் பயமா இருக்கு.
இதுக்கு பெரும்பாலும் நம்ம வலி நிவாரணியை பயன்படுத்துவோம். வலி நிவாரணியே பயன்படுத்தலாம் ஆனால் அவ்வப்போது மட்டும். இந்த மாதிரியான பிரச்சனையை சரி செய்வதற்கு நான் சொல்ல போகிற விஷயத்தை அப்படியே ஃபாலோ பண்ணீங்கன்னா. உங்களுக்கு கழுத்து வலியே இனி இருக்காது. இப்போது நான் சொல்லப் போகிற அந்த சூட்சமங்கள் அனைத்துமே இன்றும் கிராமங்களில் பின்பற்றக்கூடிய ஒரு விஷயம்தான்.
நம்ம வீட்டில இந்த படி அளக்கிற படிய எடுத்துக்கங்க. படி என்பது என்னன்னு பார்த்தீங்கன்னா அரிசியோ அல்லது தானியங்களை அளப்பதற்காக பயன்படுத்துவது. இந்த படிய வச்சுக்கிட்டு எப்படி பொடனி வலியை சரி செய்கிறதுன்னு பாக்குறீங்களா.
ரொம்ப சுலபம் நீங்க இரவு தூங்கும் போது வெறும் தரையில் படுத்து கொண்டு உங்களுக்கு கழுத்தில் எந்த இடத்தில் வலி அதிகமா இருக்கோ அந்த வழியில படுற மாதிரி இந்த படிய வைத்து படுங்க. அப்படி படுக்கும்போது என்ன ஆகும் அப்படின்னு பாத்தீங்கன்னா.
இந்தப்படி ஒரு அக்குபஞ்சர் பிரஷர் மாதிரி ஒரு அழுத்தத்தை உண்டாக்கும். அப்படி உண்டாக்கும் போது அந்த கழுத்தில் இருக்க ரத்த கட்டையோ அல்லது வீக்கத்தையோ சுலபமாக சரிசெய்துவிடும். இது 100 சதவீதம் உண்மை.
நம்ம வீட்ல இருக்கிற பெரியவங்க பெரும்பாலும் இதை பயன்படுத்தி இருப்பார்கள். எனக்கும்கூட கழுத்து வலி வரும்போது நானும் செய்வது இதுதான். இதில் பொதுவா இரும்பில் செய்தபடியே பயன்படுத்தும் போது நமக்கு பெரும்பாலும் கழுத்து வலி குணமாகிவிடும். இரும்புக்கு பொதுவாகவே ஈர்க்க கூடிய சக்தியும் சரி செய்யக்கூடிய சக்தியும் உள்ளது.
நீங்க உங்க கழுத்துல ஏதாவது தேங்காய் எண்ணையோ அல்லது வேப்ப எண்ணெயை தடவிவிட்டு இந்த படிய கழுத்துல பெரும்பாலும் எங்க வலி இருக்கும் அதுல படுற மாதிரி தரையில் வைத்து படுங்க. ஒரு அஞ்சு நிமிஷம் படுத்தாலே போதும் அந்த இடத்தில் இருக்கக்கூடிய ரத்த ஓட்டம் சீராகும் அந்த இடத்தில் இருக்கக்கூடிய வலியும் சரியாகும். இதை வாரம் ஒருமுறை செய்வது ரொம்ப ரொம்ப நல்லது.
இந்த செலவில்லா மருத்துவத்தை நீங்களும் செய்து பாருங்கள் மற்றவருக்கும் இந்த செய்தியை அனுப்பி அவர்களின் செய்யவைத்து பாருங்கள்.
🙏நன்றிகள் கோடி🙏