இதில் முதலீடு செய்யுங்கள் கோடிகளை குவிக்க முடியும் 100% வெற்றி உறுதி

இதில் முதலீடு செய்யுங்கள் கோடிகளை குவிக்க முடியும் 100% வெற்றி உறுதி

வருமானம் பெருக வளமான வழிகள் நமக்கு நம்பிக்கை தருகிற முக்கியமான அம்சங்களில், முன்னணியில் இருப்பது வருமானம். நிறைய மனிதர்களின் அகராதியில், அதிக வருமானமென்றால் வேலைக்குப் போகாமல் காலாட்டிக் கொண்டே இருந்தாலும் வந்து சேர்கிற பணம் என்றொரு பொருள் இருக்கிறது.

வருமானத்திற்கான வழிகளைப் பெருக்கிய பிறகு இப்படியொரு நிலை உருவாகும் என்பது உண்மைதான். ஆனால், ஆரம்பநிலைகளில், வருமானம் பெருக்கி வளமை வேண்டுமென்றால், அதற்கு வேறொரு மனநிலையும் அணுகுமுறையும் அவசியமாகிறது.

நிதியியல் துறை ஆலோசகராகவும், உளவியல் நிபுணராகவும் விளங்கியவர், டாக்டர். ஸ்ரூ ப்ளாட்னிக் என்பவர். பெரும் செல்வந்தர்கள் எப்படி உருவானார்கள் என்கிற ஆராய்ச்சியில் இருபதாண்டுகள் மூழ்கியிருந்த இவர், முக்கியமான கண்டுபிடிப்பொன்றை அறிவித்தார்.

நிலம் விற்பதிலோ, பங்குச் சந்தையிலோ நேரடியாக முதலீடு செய்து இலட்சாதிபதியானவர்கள் குறைவு. தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் தலைசிறந்த நிபுணர்களாகி, விரும்பும் அளவு வருமானம் பெற்று, அந்தப் பணத்தை நிலத்திலோ, பங்குச்சந்தையிலோ முதலீடு செய்தவர்கள் இவர்கள் என்பதே அந்தக் கண்டுபிடிப்பு.

இதன் மூலம் இவர் சொல்ல வருவது என்ன தெரியுமா? செல்வந்தராக உயரவேண்டுமென்றால் முதல், உங்கள் திறமைகளில் முதலீடு செய்யுங்கள். அதில் வருகிற பணத்தை, பலமடங்கு பெருகக்கூடிய முறைகளில் முதலீடு செய்து முன்னேறுங்கள். பணம் பண்ணுவதற்கான பாலபாடம் இது. உங்களில் நீங்களே முதலீடு செய்ய வேண்டுமென்றால் முதல் சில கேள்விகளை நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.

“நீங்கள் இப்போது செய்கிற வேலையோ, தொழிலோ உங்கள் சிறந்த திறமையை வெளிக் கொணர்கிறதா? உங்கள் வேலையையோ, தொழிலையோ நீங்கள் முழுமையாக நேசிக்கிறீர்களா?”

இந்த இரண்டு கேள்விகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏனென்றால், நீங்கள் செய்கிற வேலையை நீங்கள் நேசித்தால் மட்டும் போதாது. உங்கள் திறமையை அது முழுமையாக வெளிக்கொணர்வதாகவும் இருக்க வேண்டும். செய்வதற்கு சவாலான வேலையை செய்தால் அந்த சவாலான வேலைமீது ஆளுமை வளரும். அந்த சவாலே சுகமான அனுபவமாய் மாறி உங்கள் திறமைகளை வளர்ப்பதோடு வருமானத்தையும் வளர்க்கும்.

இதற்கு மிக முக்கியமான ஒன்றையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உங்கள் திறமையை வளர்த்தெடுக்கும் பயிலரங்குகளில், வழிகாட்டும் கருத்தரங்குகளில் பங்கேற்பது. உங்கள் சொல்திறனின் தரம் பலமடங்கு உயரும்போது, எந்த விதத்திலாவது நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.

வாழ்க பணமுடன்! உங்களுக்கு சகல ஐஸ்வர்யமும் உண்டாகட்டும். பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி

Jc.Dr.Star Anand Ram,

Money attraction Consultant,

98946 24425.

www.moneyattraction.in

Back to blog