ஐப்பசி துலா ஸ்நானம்
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை
ஸ்ரீ சக்தி கணபதியே துணை!
🌷👉18.10.2023 முதல் 16.11.2023 வரை ( ஐப்பசி மாதம் 30 நாட்கள்) ஐப்பசி மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்தல் உத்தமம். இந்த மாதத்தில்
🌷👉63 கோடி புண்ய தீர்த்தங்கள்
🌷👉14 லோகத்தில் இருந்து இந்த பூலோகத்தில் காவிரியில் கலந்து விடுவதாக சொல்லப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் பாபங்கள் அனைத்தும் இந்த காவேரியில் ஸ்நானம் செய்யும் போது விடுபடுகிறது. காலை சூர்ய உதயத்துக்கு முன் ப்ரஹ்ம முகூர்த்தத்தில் ஸ்நானம் செய்தல் மஹா உத்தமமாக கருதப்படுகிறது.
🌷👉முப்பது நாளும் யார் ஒருவர் காவிரியில் குளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்
🌷👉எதாவது ஒரு நாளாவது காவிரியில் குளித்து புண்ணியத்தை தேடிக்கொள்ளவும்……
🌷👉ஐப்பசி துலா ஸ்நானம்
🌷👉துலா மாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
🌷👉துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும்.
🌷👉அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள்.
அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன.
🌷👉துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள்.
🌷👉துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம்,
ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்.
🌷👉அழகு,
🌷👉ஆயுள்,
🌷👉ஆரோக்கியம்,
🌷👉சொல்வளம்,
🌷👉கல்வி,
🌷👉வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டு மென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.
🌷👉ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் இறைவன் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது.
🌷👉தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி,
🌷👉விதிசம்பூதை,
🌷👉கல்யாணி,
🌷👉சாமதாயினி,
🌷👉கலியாண தீர்த்தரூபி,
🌷👉உலோபமுத்ரா,
🌷👉சுவாசாஸ்யாமா,
🌷👉கும்பசம்பவ வல்லவை,
🌷👉விண்டுமாயை,
🌷👉கோனிமாதா,
🌷👉தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.
🌷👉காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார்;
🌷👉அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது.
🌷👉ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்பது புராணம்.
🌷👉ஐப்பசியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.
🌷👉தலைக்காவேரி,
🌷👉ராமபுரம்,
🌷👉ஸ்ரீரங்கம்,
🌷👉திருப்பராய்த்துறை,
🌷👉திருவானைக்காவல்,
🌷👉சப்தஸ்தானம்,
🌷👉திருவையாறு,
🌷👉புஷ்பாரண்யம்,
🌷👉திருச்சாய்க்காடு,
🌷👉திருவெண்காடு,
🌷👉மயிலாடுதுறை,
🌷👉கும்பகோணம்,
🌷👉திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸
வாழ்க பணமுடன் 💸
ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி
Dr.Star Anand ram
பணவளக்கலை
Akshyum Divine Center
www.drstaranandram.com
🕉🕉