வாழ்வை மாற்றும் சவால் 30 நாள்

வாழ்வை மாற்றும் சவால் 30 நாள்

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே

அனைவருக்கும் செப்டம்பர் மாத நல்வாழ்த்துக்கள்

இந்த வருடத்தில் எட்டு மாதத்தை நாம் கடந்து விட்டோம். இன்னும் நான்கு மாதம் மட்டும்தான் இந்த வருடத்தில் இருக்கின்றது. Financial year படி காலாண்டு என்று சொல்வார்கள். அதில் கடைசி காலாண்டில் உள்ளோம்.

8 மாதங்கள் நாம் செய்யாததை சம்பாதிக்காததை கற்றுக் கொள்ளாத விஷயங்களை வரை இருக்கும் நான்கு மாதங்களில் செய்யப் போகின்றோம். எல்லோருக்கும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்குமானால் ஒரு சிலர் மட்டுமே அதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். செயல்படுபவர்களுக்கே அனைத்தும் கைகூடும் என்று சொல்வார்கள்.

நாம் நாளை இருந்து இதை செய்வோம், இதை கற்றுக்கொள்வோம் என்கின்ற உறுதி மொழி எல்லாம் எடுத்துவிட்டு இரவு தூங்கி காலை எழுந்தால் நம் உடலும் மனதும் ஒருபோதும் ஒத்துழைப்பதில்லை. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் ஏற்படும் போது நானும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஒரு மனிதன் எப்போது தோற்றுப் போகிறான் என்றால் காலையில் இந்த நேரத்தில் விழிக்க வேண்டும் என்று எண்ணி அந்த நேரத்தில் விழிக்காமல் போகிறான் அல்லவா அப்போதே அவன் தோற்றுப் போகிறான். வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம் வெற்றி என்பது செய்யும் செயலை சிறப்பாக செய்வது. தோல்வி என்பது செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் இருப்பது.

இந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு அற்புதமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். இந்தப் எப்போது படிக்கிறீர்கள் அதற்கு அடுத்த நாள் காலையில் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்திரிக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். என்ன ஆனாலும் சரி அந்த நேரத்தில் உறுதியாக எந்திரிங்கள். அது ஏழு மணி ஆக இருக்கலாம் 6 மணி ஆக இருக்கலாம். ஆனால் காலை எந்திரிக்க மிக அற்புதமான நேரம் எது என்று சொன்னால் அதிகாலை 5 மணி.

அதிகாலை 5 மணிக்கு எழுந்து செயல்படுவதால் உங்கள் மூளைக்கு சுறுசுறுப்பு உத்வேகமும் கிடைக்கும். நேரம் அதிகமாக உங்களுக்கு கிடைக்கும். அதிகாலை என்பது நம் மன அமைதி யாக இந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் இருக்கின்ற நேரம். அந்த நேரத்தில் நம் திட்டங்கள் தீட்டுவதும் அந்த திட்டங்களுக்காக செயல்படுவதும் நமக்கு வெற்றியை சீக்கிரம் ஈட்டித்தரும். இந்த அதிகாலை 5 மணிக்குத்தான் தேவர்களும் சித்தர்களும் பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்கின்றார்கள்.

நான் உங்களுக்கு ஒரு சவால் தருகின்றேன். இந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கி தொடர்ந்து 30 நாட்கள். காலை 5 மணிக்கு குறித்தவாறு எழுந்திருங்கள். அதுவே உங்கள்வாழ்க்கைக்கும் வெற்றிக்கும் தொடக்கமாக இருக்கட்டும்.இந்த சவாலை ஏற்க தயார் என்றால் தயார் என்று அனுப்புங்கள்.

இன்னும் இருக்கும் நான்கு மாதங்களில் கடந்த எட்டு மாதங்களில் செய்யாததை செய்து காட்டுவோம். என்ன கற்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை செய்யத் தொடங்குங்கள் நான் உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன். என்னுடைய தன்னம்பிக்கையை தொடர்ந்து நீங்கள் பின் தொடர்ந்து கொண்டு வாருங்கள். வாழ்வில் வெல்ல நான் உங்களுக்கு உந்துகோலாக இருப்பேன்.

வாருங்கள் இந்த செப்டம்பர் மாதத்திலிருந்து நாம் நினைத்ததை அடைவோம்!!!

காலையில் நினைத்த நேரத்தில் எழுந்திருங்கள்!!!

உங்கள் வாழ்க்கையை வளமாக மாற்றிக் கொள்ளுங்கள்!!!

வாழ்க பணமுடன்!!! நன்றிகள் கோடி!!!

ஸ்ரீகுபேர குருஜியின் செப்டம்பர் மாத சவால் என்ன சவால் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://youtu.be/ZZX93kiM7uo

மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ குபேர குருஜி அவர்களை டெலிகிராமில் பின்தொடரவும்
https://t.me/staranandram

#august #September #staranandram #guberaguruji #SeptemberMonthSpecial #thankyou #Happiness #wealth #jaianandham #30dayschallenge #Motivation

Back to blog